168
வாழ்க்கையில் என்ன நடந்தாலும் …இந்த ஒரு வாக்கியத்துடன் ஒரு வழி பாதையில் பயணிக்கிறது இந்த குறும்படம்.
உலகம் ‘அடுத்து என்ன நடக்கும்’ என்கிற விடைதெரியாத கேள்வியில் ஆழ்ந்திருந்த நேரத்தில் பல அறிய முயற்சிகள் கண்சிமிட்ட தொடங்கின. அப்படி கொரானாவின் கதவடைப்பு காலத்தில் வெளிவந்த ஒரு குறும்படம் தான் இந்த ‘ஒன் வே’
மறைந்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் சிவராமனின் மகன் நடிகர் ஆதேஷ் பாலா நடித்து இயக்கியிருக்கும் இந்த ஆறுநிமிடம் முப்பது வினாடி குறும்படத்தில் வாழ்வின் எதார்த்தம் ஒருமுறை விவாதிக்கப்பட்டிருக்கிறது. அநியாயங்களுக்கு எதிராக நம்மை சண்டையிட வைத்திருக்கிது
முகபாவனைகளில் தேர்ந்த நடிகனுக்கான அத்தனை அம்சங்களையும் வெளிப்படுத்தி இருக்கிறார் பாலா. செல்போனில் சாதாரணமாக எடுக்கப்பட்ட இந்த படம் சாதாரணம் என்று சொல்லிவிடமுடியாது. பல்வேறு திரை ஆளுமைகளால் கொண்டாடப்பட்டிருக்கிறது.
பின்னணி இசையும் குரல் பதிவும் அபாரம். முதல் ஷெல்பி குறும்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மனிதனின் ஆகச்சிறந்த தருணங்களில் அகப்படாமல் போகும் சிலவற்றை பட்டியலிட்டு நம்மை கேள்விகளால் விசாரணை செய்கிறது இந்த குறும்படம்.
தற்போது நிறைய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஆதேஷ் பாலா மலையாள திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார்.
படம் பார்க்க இணைப்பு கீழே ;
add a comment