செய்திகள்தமிழகம்

பணிகள் நிறைவடைந்து தயார் நிலையில் மதுரை காமராஜர் பல்கலை மேம்பாலம்.. பயன்பாட்டிற்கு திறக்க பொதுமக்கள் கோரிக்கை..

203views

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே ரூபாய் 52 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் பணிகள் நிறைவடைந்தன. மேம்பாலத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க பொதுமக்கள்,மாணர்கள் கோரிக்கை. சாலை விபத்துகளுக்கு விடியல் ஏற்பட்ட காமராஜர் பல்கலை (மதுரை- கொச்சி) நெடுஞ்சாலை மேம்பாலம்ம துரை- கொச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 49 இல் மதுரை காமராஜர் பல்கலை அருகே ரூபாய் 52.04 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 25 மீட்டர் நீளமுள்ள மேம்பாலம் பணிகள் நிறைவடைந்து. காமராஜர் பல்கலை வாயிலில் கடந்த 2015 ல் 2 மாணவர்கள் மற்றும் ஒரு பெற்றோர் உள்பட 3 பேர் சாலை விபத்தில் மரணமடைந்து மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

இதுவரை 100க்கும் மேற்பட்ட சாலை விபத்துகளில் மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என 16 பேர் இறந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பல்கலை ஆசிரியர்கள், மாணவர்கள் நீண்ட கோரிக்கைக்கு பின் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு

தமிழக அரசின் 52.04 கோடி ரூபாய் நிதி உதவியுடன் கட்டப்பட்ட மேம்பாலம் பணிகள் நிறைவடைந்து தற்போது திறப்பு விழா நடத்த தயாராக உள்ளது . மேம்பாலம் பணிகள் நிறைவு பெற்றதால் விரைவில் திறக்க பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்து செல்லும் வகையில் பாலத்தின் கீழ் இதில் இரண்டு தரைவழி இணைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் தொலைநிலைக் கல்வி மையம் ஆகிய பகுதிகளுக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் வகையில் பாலத்தின் தரைவழி பகுதிக்களுக்கிடையே இரண்டு வழிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்கலைகழகம், தொலைநிலை கல்வி மையம் ஆகிய இரு இடங்களுக்கும் விபத்துகள் குறித்து அச்சமின்றி செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைகழகத்தின் எதிரேயுள்ள வடபழஞ்சி, அடைக்கன்பட்டி, முத்து பட்டி, மீனாட்சிபட்டி, தென்பழஞ்சி, புளியங்குளம், ராஜம் பாடி, மாவேலி பட்டி, ராஜம் பாடி, ஆலம்பட்டி, மணப்பட்டி என 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாணவர்கள், பணியாளர்கள் காமராஜர் பல்கலை கழகம் வழியேதான் மதுரை மற்றும் தேனி கம்பம் ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை இதனால் தான் சாலை விபத்துகள் ஏற்பட்டது

கடந்த 2015 முதல் காமராஜர் பல்கலை வளாக பகுதிகளில் 100க்கு மேற்பட்ட பல்வேறு சாலை விபத்துகளின் மூலம் 16க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர், இவ்விபத்துகளில் உயிரிழந்த மாணவர்கள். பொதுமக்கள், பேராசிரியர்களும் அடங்குவர்.  மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் பாரி பரமேஷ்வரன் கூறும்போது. தற்போது காமராஜர் பல்கலைக்கழகம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் வேலை முடிந்து திறப்பதற்கு தயாராக உள்ளது மிக்க மகிழ்ச்சி இதனால் பல்வேறு விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது

கடந்த காலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் பல்வேறு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது புதிய பலத்தினால் வெளியூர் செல்லும் பேருந்துகள் மேலே செல்வதும் பல்கலைக்கழகம் அதனால் சுற்றியுள்ள பகுதியில் செல்பவர்களுக்கு இணைப்பு சாலைகள் உள்ளதால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளது அதேபோல் நாகமலை புதுக்கோட்டை வரை அமைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புச்சுவர்கலால் விபத்து ஏற்படுகிறது.

இவ்விபத்தினை தவிர்க்க வாகனங்கள் திரும்பும் வழியில் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தி தாந்தால் பின்னால் வரும் வாகனங்களினால் விபத்து ஏற்பட்டு மனித உயிர்கள் மட்டுமல்ல விலங்களுக்கும் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கப்படும். இதன் மூலம் இந்த பகுதி விபத்தில்லா பகுதியாக மாறும் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றேன் என கூறினார்.

பல்கலை ஊழியர் சங்க நிர்வாகி
முருகன் கூறும் போது.

1966 ல் உருவாக்கப்பட்ட பல்கலைகழகம் முதலில் சிறிய ரோடா க இருந்தது.
தற்போது பயன்பாடு அதிகரித்த நிலையில் சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதில் நிறைய உயிர்சேதம் ஏற்பட்டது. தற்போது கட்டப்பட்ட புதிய பாலத்தினால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பாக வந்து செல்லும் நிலை உள்ளது. இது மிகவும் பயனுள்ள விசயம் மாணவர்கள் மட்டுமல்ல சுற்றியுள்ள ஊர்களில் இருந்து வரும் கிராம மக்களுக்கும் பயன் அளிக்கிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

பேட்டி,
பாரி பரமேஸ்வரன்
பேராசிரியர்
மதுரை காமராஜர் பல்கலைகழகம்

முருகன்
தலைவர்
மதுரை காமராஜர் பல்கலை ஊழியர் சங்கம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!