மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்திற்கு நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி மூர்த்தி வழங்கினர்.
கனமழையின் காரணமாக ஓடை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் எதிர்பாராத விதமாக சிக்கி உயிரிழந்த வாடிப்பட்டி வட்டம், டி. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த திரு.காயாம்பு (வயது 47) என்பவரது குடும்பத்தாருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 4 லட்சம் நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உட்பட பலர் உள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்








