தமிழகம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா போதை ஆசாமியால் பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக கண்டான் ஆர்ப்பாட்டம்

327views
அனுப்புனர்:
என் எஸ் பெருமாள்
மாவட்டச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இராமநாதபுரம்.
பெறுநர்: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகம் முதல்வரின் தனிப்பிரிவு சென்னை.
பொருள்:
( இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா போதை ஆசாமியால் பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக…)
தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு
வணக்கம்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளிவாசல் தெருவை சார்ந்த லேட் கண்ணன் – நாகலெட்சுமி தம்பதியரின் மகள் மேகலா வயது 27 கணவர் பரமேஸ்வரனை பிரிந்து தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஜனனி வயது 5, யாழினி வயது 1 என்கிற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் அருகேயுள்ள பலகாரக்கடையில் உதவியாளராக மேகலா வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். கணவன் கைவிட்ட நிலையில் இரண்டு பெண் குழந்தைகளோடு, கணவனை இழந்த தன்னுடைய தாயாருடன் வசித்துள்ளார்.

இந்தச்சூழலில் 23.06.24 அன்று மாலை 4 30 மணியளவில் அவர் வேலை பார்க்கும் இடத்திற்கு வந்த கஞ்சா போதை ஆசாமி மணிகண்டன் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவை சரமாறியாக குத்தியுள்ளார். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மேகலா துடிதுடித்து இறந்துள்ளார். உடனடியாக காவல்துறை மணிகண்டனை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது.
தாயாரை பறிகொடுத்த இரண்டு பெண் குழந்தைகளும் தற்போது நிற்கதியாக நிற்கின்றனர். கணவனை இழந்த பாட்டியுடன் அந்தக் குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் உதவி தேவைப்படுகிறது. உயிரிழந்த மேகலாவின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும்.
அத்துடன் இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டக் குழு தங்களிடம் கேட்டுக்கொள்கிறது. கனிவான பார்வையுடன் இந்த உதவிகளை செய்வீர்கள் என்கிற திடமான நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
மேலும் மது அருந்தி அல்லது கஞ்சா போதையுடன் இருப்பவர்களை கைது செய்ய காவல்துறை அஞ்சுகிறது. காரணம் கைது செய்யப்பட்ட அந்த ஆசாமி இறந்துவிட்டால் என்ன செய்வது என்கிற தயக்கம் அவர்களுக்குள் இருக்கிறது. இதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு மாவட்டம் தோறும் குறைந்தபட்சம் இரண்டு இடங்களிலாவது போதை மீட்பு மறுவாழ்வு மையம் என்கிற முகாமை அமைக்க வேண்டும்.
பொதுவெளியில் போதையுடன் திரியும் நபர்கள் பிரச்சனைகளைச் செய்தால் அந்த மையத்தில் கொண்டு போய் சேர்த்து விட வேண்டியது என்கிற அளவுக்கு தமிழ்நாடு அரசு வேகம் காட்ட வேண்டும். அதற்குத் தேவைப்படுகிற சட்ட திருத்தங்களையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
நாள் 25.6.2024.
இடம் பரமக்குடி.
இப்படிக்கு
என் எஸ் பெருமாள்
மாவட்டச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!