தமிழகம்

வேலூர் தமிழக வெற்றி கழகம் சார்பில் ரம்ஜான் முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

49views
வேலூர் மாவட்டம், வேலூர் மாங்காய் மண்டி பஸ் ஸ்டாப் அருகே, என்.எஸ்.ஆர்.திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம், வேலூர் மேற்கு மாவட்டம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வேலூர் மேற்கு மாவட்டம் தொண்டரணி, வேலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர், பி.ஏ.இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இஸ்லாமிய சொந்தங்கள், மாவட்ட த.வெ.கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஒன்றிய பகுதி மற்றும் அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இப்புனித நன்னாளில் அன்பை பகிர்ந்து அனைவருக்கும் பிரியாணி பொட்டலம், பழங்கள் பொட்டலம்,  நோன்பு கஞ்சி உள்ளடங்கிய நல திட்ட பைகளை வழங்கினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!