தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோட்டக்குப்பத்தில் நடைப்பெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

30views
இன்று (23.03.2025), விழுப்புரம் கிழக்கு மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கோட்டக்குப்பம் நகர நிர்வாகி திரு.A.முகமது கௌஸ் அவர்களின் ஏற்பாட்டில், வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பம் நகரம் மனோன்மணி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் இஸ்லாமியப் பெருமக்கள் மற்றும் கழக சகோதரர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்து இஃப்தார் விருந்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.G.P.சுரேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் நகர நிர்வாகி திரு.ECR முஹம்மத் அன்சாரி, திரு.BM.முஹம்மத் சம்சுதீன், திரு.S ஜபருல்லாஹ், திரு.S சாகுல் ஹமீது, திரு.Er பஷீர், திரு.Ar ஜான் மற்றும் கழக நிர்வாகிகள் தோழர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டு நோன்பு திறந்தனர்.
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!