நிலையூர் பெரிய கன்மாய் கரை உடையும் அபாயம்! பொறுப்பில்லாத பொதுப்பணித்துறை அதிகாரிகள்..!
நிலையூர் பெரிய கன்மாய் கரை உடையும் அபாயம்! பொறுப்பில்லாத பொதுப்பணித்துறை அதிகாரிகள். நிலையூர் கண் மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது நிலையூர் பெரிய கண்மாய். சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் மூலம் இப்பகுதியில் 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இக்கண்மாயின் சுமார் 3 கிமீ நீளமுள்ள கரையை பலப்படுத்த இரண்டு கட்டமாக இதில் 2020ம் ஆண்டில் சுமார் 1 கிமீ தூரத்திற்கு குடிமராமத்து பணிகள் நடை பெற்றன. ரூ.90 லட்சம் செலவில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
குடிமராமத்து பணி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் கண்ணமா கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது தற்போது தொடர் மழை காரணமாக வைகை உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களில் கண்மாய் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. மேலும் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தின் அருகே ஏற்கனவே நீர் கசிவு இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே கரை உடைப்பை உடனடியாக சரி செய்யாவிட்டால் பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி மக்கள் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில் குடிமராமத்து பணிகளை கடந்த முறை ஆளுங்கட்சியில் இருந்த அதிமுகவினர்மேற்கொண்டதால் பெரிய அளவில் முறைகேடு செய்துள்ளனர். கண்மாயில் அள்ளிய மண்ணை பெருமளவு வெளியில் விற்பனை செய்துவிட்டு குறைந்த அளவு மண்ணை கொண்டு மட்டுமே கரையை பலப்படுத்தி உள்ளனர். அதனால்தான் சிறுமழைக்கே கரை சேதம் அடைந்து விட்டது. எனவே பொதுப்பணித்துறைஅதிகாரிகள் உடனடியாக கண்மாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
செய்தியாளர்.. காளமேகம், மதுரை