தமிழகம்

நடிகர் விஜய்க்கு அரசியல் தேவையற்றது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களோடு யாரையும் ஒப்பிட முடியாது – நடிகர் பஷீர் பேட்டி

53views
ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள் கூறிய ஜெ.எம்.பஷீர் திரைப்பட நடிகர் மற்றும் திமுக கழக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு.
ரமலான் மாதத்தில் 30 நாள் மனதையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி இறைவனை நோக்கி நோன்பு இருந்து வழிபடுவது இஸ்லாமியர்களின் கடமை, இஸ்லாமிய சகோதரர் மட்டுமல்லாமல் அனைத்து மத சகோதரர்களும் ரமலான் வாழ்த்து சொல்வது தமிழ்நாட்டில் நமது ஒற்றுமையை காட்டுகிறது, எந்த மதவாத இயக்கமும் நம்மை பிரிக்க முடியாது
நடிகர் விஜய் பற்றி பேசும்போது:
அரசியல் தலைவராக பொதுக்குழுவில் மேடையில் பேசும் போது யாரோ எழுதித்தந்த பெயரை மாற்றி பேசுவது அழகல்ல, தவறாக பதிவிடுவது மிகப்பெரிய தவறு. குறிப்பு எடுத்துப் பேசும்போது ஒரு முறைக்கு இருமுறை அவரே சரிபார்த்து பேச வேண்டும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்களுடன் அரசியல் அனுபவங்கள் பெற்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆரை விஜயுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. சினிமாவில் ஆயிரம் கோடி வருமானம் பெறுகிறார் என்று சொல்பவர் அதற்கான வருமான வரியை சரியாக கட்டியுள்ளாரா என்பது தெரியவில்லை, மேலும் சென்னை சுற்றியுள்ள வடபழனி போரூர் ECR போன்ற இடங்களில் 90 சதவீத திருமண மண்டபங்கள் விஜய் பெயரில் உள்ளது.
அரசியலில் விஜய் ஒரு குழந்தை, தன்னம்பிக்கையுடன் பேசுபவர் முதலில் ஓட்டு வங்கியை நிரூபிக்க வேண்டும். திமுகவுக்கு எதிர்க்கட்சி என்றால் அது அதிமுக மட்டுமே, திராவிட கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டில் நிலைத்திருக்கும்.
மேலும் தேசியத் தலைவர் படத்திற்கான ரிலீஸ் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அடுத்ததாக ஒரு பெரிய படம் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார்.
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!