தமிழகம்

வேலூரில் வாக்கு சேகரிப்புக்கு பின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி

37views
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தனது பிரச்சாரத்தை வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றார் அதன் தொடர்ச்சியாக இன்று வேலூர் மக்கான் அருகே உள்ள புதிய மீன் மார்க்கெட்டில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் அப்போது மீன் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் சென்று அவர்களிடம் இருந்து கத்தியை வாங்கி மீன்களை வெட்டியும் மீன்களை விற்றும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார் மன்சூர் அலிகானை கண்ட பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டும் கைகுலுக்கியும் மகிழ்ந்தனர்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில்,  எனக்கு யாரும் பிரச்சாரம் செய்ய அவசியம் இல்லை நான் தான் இங்கு வெற்றி பெறபோகிறேன் பல அமைப்புகள் மக்கள் ஆயிரக்கணக்கானோர் கேட்டு கொண்டதற்கு இணங்கள் இங்கு போட்டியிடுகிறேன்
திமுக,காங்கிரஸ்,அதிமுக மாறி மாறி நாட்டை பல ஆண்டுகளாக ஆண்டனர் ஆனால் மக்கள் பிச்சைகாரர்களாகவே இருக்கின்றனர் மோடி நடத்துவது நாடக தேர்தல் மோடி எல்லாத்தையும் முன் கூட்டியே செய்துவிட்டுதான் தேர்தலை நடத்துகிறார் ஆரம்பத்திலிருந்து சொல்கிறேன்
ஆளுநரே தேவையில்லை ஆளுநர் பதவி என்பதே தேவையில்லாத ஒன்று மக்கள் முன் நீங்கள் பார்க்கதான் போகிறீர்கள் ஓட்டு மெஷினை எதிர்த்து யாரும் பேசவில்லை நான் பாராளுமன்றம் சென்றால் வாக்கு சீட்டு மூலம் தேர்தலை நடத்த சொல்லுவேன் இது போலி ஜனநாயகம் ஏமாற்று வேலை.
நீங்கள் இசுலாமிய வாக்கை பிரிக்க பாஜக மற்றும் அதிமுகவுக்கு B Team ஆக செயல்படுவதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்க்கு, நான் யாருக்கும் A team B team அல்ல. வேண்டும் என்றே பெய் பரப்புகிறார்கள். நான் B team to Z Team வரை சொல்வார்கள். பொருத்திருந்து பாருங்கள் நான் எல்லோருக்கும் வேண்டு வைக்க போகிறேன்.
பெட்டோல், டீசல், கேஸ் விலையை ஸ்டாலின் குறைப்பேன் என வாக்குறுதி கொடுக்கிறார். அதை ஏன் வாக்குறுதியா கொடுக்குறிங்க, இப்பவே 38 பேரை நீங்க தானே வெச்சிருக்கிங்க அதை அதை இப்பவே செய்ய வேண்டியது தானே என கூறினார்.
திமுக அண்ணா சின்னத்தை வைத்து ஏமாற்றி குடும்பத்தை வளர்க்கின்றனர் இப்படி இருக்கும் போது தனி ஒருவனாக போராடுகிறேன் ஏ..டீமா பி…டீமா என போக போக பார்த்தீர்கள் இவர்களை சும்மா போக மாட்டேன் எல்லோருக்கும் வேட்டு வைப்பேன் மலைகளை பசுமையாக்குவேன் ஏரிகளை அதிகம் இம்மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!