தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம் விழா

42views
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (16.02.2025),
ஐந்தாம் நிகழ்ச்சியாக, வடசென்னை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மகளிரணி நிர்வாகிகள் ஏற்பாட்டில், R.K.நகர் பகுதி 41-வது வட்டத்தில் 51 கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம் விழா கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.!
அதனைத் தொடர்ந்து 51 கர்ப்பிணிப் பெண்களுக்கும் வெள்ளி நாணயமும், விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் சமபந்தி விருந்தும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகி திரு.வேலு அவர்கள் முன்னிலை வகித்தார்.

சென்னை வடக்கு (வ) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.V.சிவா, மற்றும் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் திரு.கட்பிஸ், திரு.K.விஜய், திரு.B.ஜெகன், திரு.நவின், திருமதி.பல்லவி, திரு.T.ராஜேஷ், திரு.தினேஷ் ராஜா, வழக்கறிஞர் திரு.தன்ராஜ், திருமதி.இந்திரா, திருமதி. ஜெயமணி, திருமதி.பாரதி, திருமதி.தேவி, திருமதி.ராணி, திருமதி.பொற்கொடி மற்றும் மகளிர் நிர்வாகிகள், தோழர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!