முக்கிய செய்திகள்
தமிழகம்

பிரம்மபுரம் காவல்நிலையம் பழைய காட்பாடியில் தற்காலிகமாக திறந்துவைத்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் காவல்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க கடந்த ஒரு ஆண்டு முன் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.  ஆனால் பிரம்மபுரம் கிராமத்தில் காவல்நிலையம் அமைக்கப்படவில்லை.  அதற்கு பதிலாக வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பழைய காட்பாடியில் உள்ள பழைய கால்நடை மருத்துவமனையில் பழைய கட்டிடத்திற்கு வர்ணம் பூசி நேற்று முன்தினம் மாலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி பின் குத்து விளக்கு ஏற்றி...
சினிமா

‘ஒன் வே’ ஒற்றை மனிதனின் உன்னத முயற்சி

வாழ்க்கையில் என்ன நடந்தாலும் ...இந்த ஒரு வாக்கியத்துடன் ஒரு வழி பாதையில் பயணிக்கிறது இந்த குறும்படம். உலகம் 'அடுத்து என்ன நடக்கும்' என்கிற விடைதெரியாத கேள்வியில் ஆழ்ந்திருந்த நேரத்தில் பல அறிய முயற்சிகள் கண்சிமிட்ட தொடங்கின. அப்படி கொரானாவின் கதவடைப்பு காலத்தில் வெளிவந்த ஒரு குறும்படம் தான் இந்த 'ஒன் வே' மறைந்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் சிவராமனின் மகன் நடிகர் ஆதேஷ் பாலா நடித்து இயக்கியிருக்கும் இந்த...
தமிழகம்

காட்பாடியில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு இரவு பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது.  பெருமாள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று திருவோண தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்த பிரசாத விநியோகம் நடந்தது. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியர் மற்றும் குழுவினர் செய்து இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
சினிமா

படஜெட் மூவி என்கிற பிம்பத்தை பகிரங்கமாக உடைத்திருக்கிறது இந்த பேமிலி படம்

திரை விமர்சனம் : இப்படித்தான் சினிமா எடுக்கவேண்டும் என்கிற வரையரை எதுவும் இல்லை என்றாலும் இப்படியும் படம் எடுக்கலாம் என்கிற இலக்கணத்தை உருவாக்கும் திரைக்கலைஞர்கள் மக்களால் எப்போதும் எல்லா காலத்திலும் கொண்டாடப் படவே செய்கின்றனர். ஒரு காலத்தில் அவார்டு திரைப்படம் என்றால் அது நமக்கானதில்லை என்ற வெகு ஜன ரசனையை 'கொட்டுக்காலி' மாதிரியான படங்கள் ஒரேயடியாக நொறுக்கி போட்டது. மக்களை திரையரங்கம் நோக்கி வரவழைத்தது. தமிழ் திரைப்படங்களின் தரம் சமீபகாலமாக...
தமிழகம்

வேலூர் மாநகரத்தில் முன்னாள் அதிமுக பொதுச்செயலாளரும்முதல்வருமான ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் அன்னதானம்

அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வேலூர் அதிமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள்ஏற்பாடு செய்து இருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்பு வேலூர் பகுதியில் அன்னதானம் செய்யப்பட்டது. வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் அதிமுகவினர் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
தமிழகம்

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் சார்பில் இலவச லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது : நாகர்கோவில் மேயர் துவக்கி வைத்தார்

நாகர்கோவில் 03  கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் இறை மக்களுக்கு இலவச லெமன் ஜூஸ் வழங்கப்பட்டது இந்நிகழ்வை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார். பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் திரு. மு. தர்மராஜன் தலைமை தாங்கினார். ப்ரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் சட்ட ஆலோசகர் திரு. கிறைஸ்ட் மில்லர். பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் மாநில...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : கோபத்தை கோபித்துக் கொள்ளுங்கள்

நெல்லை கவி.க.மோகனசுந்தரம் இந்த உலகத்தில் நமது மிக முக்கிய சத்ரு நாம் கொள்ளும் கோபம். கோபம் என்பது நெருப்பு போல தன்னோடு சேர்ந்தவர்களையும் அது எரித்து விடும். கோபம் எவ்வாறெல்லாம் வருகிறது தெரியுமா? பதட்டத்தில் வரும். நமது இயலாமையில் வரும். நமது ஏக்கத்தில் வரும். நாம் கொள்கின்ற பொறாமையில் வரும். நாம் அடைகின்ற தோல்வியில் வரும். எந்த வழியே வந்தாலும் அந்தக் கோபத்தை அணை போட்டுத் தடுத்துக் கொள்ள கற்றுக்...
தமிழகம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கொடியேற்றம்

புகழ்மிக்க திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் தீபம் வரும் 13-ம் தேதி மலைமேல் மாலை 6 மணிக்கு ஏற்றப்படும், அதற்கு முன்பாக 4-ம் தேதி காலை அருணாலேஸ்வரர் கோயிலில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
தமிழகம்

வேலூர் மகளிர் காவல்நிலையம் முன்பு குடும்ப பிரச்னை காரணமாக சிறுமி தீ குளிக்க முயற்சி

வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் முன்பு 4-ம் தேதி முற்பகல் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி திடீரென்று மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயன்றபோது அங்கிருந்த காவலர்கள் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை செய்துவருகின்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
சிறுகதை

தெய்வச் செயல்…!

வாராவாரம் வியாழக்கிழமை மயிலாப்பூரில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் குமாரும் தினேஷும். எந்த வேலை இருக்கிறதோ இல்லையோ வியாழக்கிழமை என்று வந்துவிட்டால் காலையில் விரதம் இருந்து சாய்பாபா கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள் இருவரும். அத்தனை பக்தி. வழக்கம் போல அந்த வாரமும் தி.நகரிலிருந்து மயிலாப்பூருக்கு செல்வதற்கு ஷேர் ஆட்டோ விற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். ஷேர் ஆட்டோ வருவதற்கு கொஞ்சம் தாமதமானது...
1 28 29 30 31 32 956
Page 30 of 956

Right Click & View Source is disabled.

error: Content is protected !!