தியானலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறியது! ஈஷாவில் தரிசனம் செய்த மாற்றுத் திறனாளிகள் குழு நெகிழ்ச்சி
கோவை ஈஷா மையத்திற்கு ஆன்மீக பயணமாக 120 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் குழு வருகை தந்தது. அங்கு எங்களைப் போன்றவர்களாலும் தியானலிங்கத்தை தரிசிக்க முடியுமா என்ற ஏக்கம் தற்போது நிறைவேறியதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். தமிழ்நாடு மாற்றத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கோவை மாவட்ட அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் 120 பேர் ஈஷாவிற்கு வருகை புரிந்தனர். அவர்கள் சிரமங்கள் ஏதும் இல்லாமல் தரிசனம் செய்ய...