யாருக்கும் தெரியாமல் அமர்ந்துள்ளது !
அடர்ந்து கிளைபரப்பியபடி குளக்கரை ஆலமரம் யாரோ கட்டிய ஊஞ்சல் .. வந்தவழியே செல்லும்போதெல்லாம் அமர்ந்து ஆடிவிட்டுச் செல்கிறேன் ! கால்களை உந்தி உந்தி மேலெழ விண்வெளிக்குள் பிரவேசித்த இன்ப வெள்ளத்தில் பள்ளிக்கூடச் சிறுமிகள் ! இனம்புரியா மனவமைதியில் இந்த ஊஞ்சல் பலருக்கு இன்ப விருந்தளிக்கிறது ! சுயநலத்தைக் கூறுபோட்டு காற்றுவெளியில் கரைத்தபடி ஆடும் ஊஞ்சல் பலரோடு கை குலுங்குகிறது ! கிராமியப் பாடல்களை முணுமுணுக்க வைத்து காதலர்களை இணைத்தப் பாலமாக...