சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘பயாஸ்கோப்’
சினிமா குறித்து எந்த அறிமுகமும் இல்லாத கிராமத்து மக்கள் எப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்கினார்கள் என்பதை கலகலப்பாக சொல்லும் உண்மைக் கதை. ஜனவரி 3 அன்று 'பயாஸ்கோப்' வெளியாகிறது டீசரை ஆர்யா, சசிகுமார் வெளியிட்டனர். பெரிதும் பாராட்டப்பட்ட 'வெங்காயம்' திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் 'பயாஸ்கோப்'. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி...