“சுனாமி” – நினைவலைகள்
சுனாமி, காலனின் பினாமி! அகலக் கால்வைத்த ஆழிப்பேரலையால் - தமிழ்க்கரையின் நீளம் பார்த்தது - மரணங்களின் நீலம் பூத்தது - மறக்க முடியா ஓலம் கேட்டது. 2004 டிசம்பர் இருத்தியாறு. பல்லாயிரக்கணக்கான உயிர்கள் புல்லாகிப்போகுமெனக் கண்டது யாரு? கடலடியில் பாறைத் தட்டுகள் இடறியதாம் - அதற்கு இந்தோனேஷியாவில் கோபித்துக் கொண்டவள் இங்கு வந்து சீறிவிட்டுச் சென்றாய் - விதிகளைத் திருத்தி, சீவிவிட்டுச் சென்றாய் - காலனை எங்கள் மீது ஏவிவிட்டுக்...