தமிழகம்

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் துவக்க விழா

47views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் முகாம் 17.02.2025 அன்று துவக்க விழா கீழாயூர் கிராமத்தில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் A. அப்ரோஸ் வரவேற்றார். முகாமினை இளையான்குடி, பேரூராட்சி தலைவர் ஜனாப் P.A. நஜ்முதீன் அவர்கள் துவக்கி வைத்தார். துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் மற்றும் துணை முதல்வர் முனைவர் A. முஸ்தாக் அஹமது கான் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நிகழ்வில் 12 வது வார்டு கவுன்சிலர் ஜனாப் சேக் அப்துல் ஹமீத் அவர்களும், ஊர் பிரமுகர் ஜனாப் உமர் அவர்களும் கலந்துகொண்டனர். தமிழ்துறை உதவிப்பேராசிரியர் திரு. K. அப்துல் ரஹீம் “வளமிகு பாரதத்திற்கு நல மிகு இளைஞர்கள்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் டிஜிட்டல் தொழிநுட்பம் கல்வி முறை இன்றியமையாமை மற்றும் அதனை பாதுகாப்பான முறையில் கையாளுதல் என்னும் தலைப்பில், டிஜிட்டல் தொழில்நுட்பம் அதிகம் பயன்படுவது கிராமத்திலா அல்லது நகரத்திலா என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. மேலும் டிஜிட்டல் தொழில்நுட்ப கல்விமுறை குறித்து கிராம பொதுமக்களிடம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் A. அப்ரோஸ், முனைவர் M. சேக் அப்துல்லா, முனைவர் B. பாத்திமா கனி மற்றும் முனைவர் B. முஹம்மது பாத்திமா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!