தமிழகம்

போக்சோ வழக்கில் 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை; நெல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

50views
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, சிறுமியின் தாய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னசாமி என்பவரின் மகன் செல்லத்துரை (33) மற்றும் கடல் முருகன் என்பவரின் மகன் மாரிசெல்வம் (20) ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி அன்பு செல்வி குற்றவாளி செல்லதுரைக்கு 21.5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம், குற்றவாளி மாரிசெல்வம் என்பவருக்கு 1.5 வருடம் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த வாசுதேவநல்லூர் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!