தமிழகம்

நெல்லை மத்திய மாவட்ட மதிமுக செயலாளருக்கு சிறந்த மாமனிதர் விருது; வைகோ உள்ளிட்ட பலரும் வாழ்த்து

125views
திருநெல்வேலி மத்திய மாவட்ட மதிமுக செயலாளர் கேஎம்ஏ. நிஜாமிற்கு அவரது சமூக, அரசியல், தமிழ் சேவைகளை பாராட்டி சிறந்த மாமனிதர் விருது நெல்லை டவுண் லிட்டில் ஃபிளவர் மாடர்ன் ஸ்கூல் வளாகத்தில் நடைபெற்ற தமிழர் பாரம்பரிய கலைத் திருவிழாவில் வழங்கப்பட்டது. திருநெல்வேலி உலகத் தமிழ் கலை பண்பாட்டு அகாடமி சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திருநெல்வேலி மத்திய மாவட்ட மதிமுக செயலாளர் கே.எம். ஏ. நிஜாமிற்கு சிறந்த மாமனிதர் விருதினை நெல்லை மாநகராட்சி மேயர் பி எம் சரவணன், துணை மேயர் கே. ஆர் ராஜு ஆகியோர் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் நெல்லை ஜி.எஸ். அபூபக்கர், பண்பொழி ஜமாத் தலைவர் மீரான் முகைதீன், டாக்டர் ரஸ்மி ரூமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உலக தமிழ் கலை மற்றும் பண்பாட்டு அகாடமி சார்பில் சிறந்த மாமனிதர் விருது பெற்ற நெல்லை கே.எம்.ஏ நிஜாமிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, மதிமுக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் திமு. இராசேந்திரன் மற்றும் மதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மதிமுக அனைத்து மாவட்ட செயலாளர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இவர்களுடன் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பல்வேறு இயக்கங்கள் சார்பில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நெல்லை கேஎம்ஏ. நிஜாம் நன்றி கூறினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!