தமிழகம்

நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி : நூல் பரிசளிப்பு

59views
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் ஏழாவது கூட்டம் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையில் நடைபெற்றது. இதில் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் புன்னைச் செழியன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். மைய நூலக வாசகர் வட்டத் துணைத்தலைவர் முனைவர் கோ. கணபதி சுப்ரமணியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் ‘கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!’ எனும் தலைப்பில் கலை பதிப்பகத்தின் ஆசிரியரும் கவிஞருமான பாப்பாக்குடி இரா. செல்வமணி சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

முன்னதாக தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தின் இணைச் செயலாளர் புத்தனேரி கோ. செல்லப்பா தொடக்க உரையாற்றினார். ஆசிரியர் சிவ. செல்வ மாரிமுத்து, சமூக ஆர்வலர் சுரேஷ் அஸ்வின் வாழ்த்துரை வழங்கினார்கள். மின் கழகத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நடராஜன் மற்றும் திருவருள் லத்தீப் ஆகியோர் மதிப்புரை வழங்கினர். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசியை பிரியதர்ஷினி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேனாள் துணை ஆட்சியர் தியாகராசன் குலுக்கல் முறையில் தேர்வு பெற்ற கஸ்தூரி, பேராசிரியர் ஹரிஹரன் ஆகியோருக்கு நூல்களை பரிசளித்தார். நூற்றாண்டு விழா கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்ச்செம்மல் பாமணி, கவிஞர்கள் ஜெயபாலன், கவிஞர் சக்தி வேலாயுதம், செ.ச.பிரபு, நல் நூலகர் முத்துக் கிருஷ்ணன், பொன் சக்திகலா, எழுத்தாளர் மு.வெ.ரா., வள்ளி சேர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!