தமிழகம்

பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் விருது வழங்கும் விழா

158views
நாகர்கோவில் : 
சமூக சிந்தனையோடு செயலாற்றக்கூடிய பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நாகர்கோவில் எஸ் கே எம் ஹாலில் வைத்து நடைபெற்றது. பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் மு. தர்மராஜன் தலைமையில் மாநிலத் துணைச் செயலாளர் அப்டா மு. கண்ணன் மாநில பொருளாளர் ரவி முருகன் மாநில துணைச்செயலாளர் வி. சசிக்குமார் மாநில மக்கள் தொடர்பு அணி தலைவர் காசி விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர் சுத்த சன்மார்க்க அருள் ஒளி தவத்திரு சுவாமி பத்மேந்திரா ஆசியுரை வழங்கினார் விஜய் டிவி புகழ் சஞ்சய் விழாவினை தொகுத்து வழங்கினார் முன்னதாக மாநிலத் துணைத் தலைவர் ஜெயராஜ் வரவேற்புரை ஆற்றினார். விழாவின் துவக்கத்தில் நாஞ்சில் ரேவதி வில்லிசை குழுவினரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து நாகர்கோவில் கவிதாலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வண்ணப் பலூன்கள் பறக்க விடப்பட்டது. தொடர்ந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை சிபிஐ வழக்குகள் நீதிமன்றம் சென்னை ஓய்வு பெற்ற மாண்புமிகு நீதிபதி எ.திருநீல பிரசாத். கேரள முன்னாள் மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ராஜேந்திரன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் இந்து அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் எம். ஸ்ரீலிஜா கவிதாலயா நாட்டியப்பள்ளி நிறுவனர் பி.நிஷா ரஜின் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநிலத் துணைத் தலைவர் அல் அமீன் சாகுல் அமீது பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மில்லர் தோவாளை ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் இ.சாந்தினி பகவதியப்பன் பீமநகரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எல்.சஜிதா சுப்பிரமணியன் பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் மாநில பேச்சாளர் எம் எஸ் அமலன் மற்றும் பலர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
விழாவில் போதையில்லாத தமிழகம் என்பதை வலியுறுத்தி அனைவரும் செல்போன் டார்ச் லைட் ஒளிரச் செய்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் வில்லிசை குழு தலைவர் அகிலா லட்சுமி என்ற ரேவதிக்கு நவரத்தினகலா ஸ்ரீ விருது . கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு பள்ளி தலைமை ஆசிரியை கமலா அவர்களுக்கு கர்மவீரர் காமராஜர் விருது இந்து அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஆன்மீகச் செம்மல் வருது நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா அவர்களுக்கு இளம் பெண் ஆளுமை விருது. தோவாளை சக்தி மகளிர் அறக்கட்டளை தலைவர் சாந்தினி பகவதியப்பனுக்கு சிறந்த தொண்டு நிறுவனம் விருது வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் சகுந்தலா அவர்களுக்கு சிறந்த சாதனையாளர் விருது சமூக சேவகர் வி. சசிக்குமார் அவர்களுக்கு இளம் பெண் ஆளுமை விருது பீமநகரி ஊராட்சி மன்ற தலைவர் சஜிதா சுப்பிரமணியன் அவர்களுக்கு இளம் சாதனையாளர் விருது சமூக ஆர்வலர் அங்ரி சுஜித் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருது சினேகம் பெற்றோர் இல்லம் நிறுவனர் லதா கலைவாணன் அவர்களுக்கு சிறந்த சமூக தாரகை விருது கவிதாலயா நாட்டியப்பள்ளி நிறுவனர் நிஷா ரஜின் அவர்களுக்கு நவரச நாட்டிய ஸ்ரீ விருது மற்றும் சமூக சிந்தனையோடு செயலாற்றக்கூடிய 114 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் செயற்குழு உறுப்பினர் தங்க சுதா அலுவலக பணியாளர்கள் சிந்து நந்தினி ஷோபனா விசாகன் விசால் மற்றும் பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர் ஜி எஸ் முருகன். மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ். சுயம்பு மாநில இலக்கிய அணிதலைவர் சுரேஷ்குமார் மாநில விளையாட்டு அணி செயலாளர் வசுந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!