தமிழகம்

உலையூர் ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளி பள்ளியில் புதிய மேசைநாற்காலி, விளையாட்டு சாதனங்கள் திறப்பு விழா: மாணவர்கள் மகிழ்ச்சி உன்னதம்!

20views
முதுகுளத்தூர் தாலுக்கா, உலையூர் கிராமம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று மாணவர்களின் முகங்களில் மகிழ்ச்சி பொங்கியது. முயல் அறக்கட்டளை, ஊர் மக்களுடன் ஒன்றிணைந்து வழங்கிய புதிய மேசைகள், நாற்காலிகள் மற்றும் விளையாட்டு சாதனங்கள் திறக்கப்பட்டதையொட்டி பள்ளி வளாகம் விழாவாக மாறியது.
பள்ளி குழந்தைகள் புதிய நாற்காலிகளில் அமர்ந்ததும், புது ஊஞ்சல்களில் குதிகால் விட்டதும், பள்ளியின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்த ஊரின் நல்வாழ்க்கையின் சின்னமாகும். இந்த திட்டத்தை கிராம மக்களே தாங்கள் விருப்பமாகவே நிதியளித்து செயல்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவின் சிறப்பு விருந்தினராக வந்த திரு. துரைபாண்டி அவர்கள், சிறந்த நகைச்சுவையுடன் நிறைந்த, மனதை உந்தும் உரையாற்றினார். “குழந்தைகள் படிப்பில் முன்னேற வேண்டுமானால், ராக்கெட் போல நமுக்குள் உத்வேகம் வேண்டும்” என்றார் அவர், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், கொடையாளிகளுக்கும் உற்சாகம் கொடுத்தார்.
பள்ளி தலைமை ஆசிரியரியான திருமதி ஹேமலதா அவர்கள், “நமது பள்ளி குழந்தைகளின் அறிவையும் உயர்த்துவது எனது பொறுப்பு, அதனால் உங்கள் குழந்தைகளை எங்களை நம்பி அனுப்பிவைங்கள் ” என உறுதியுடன் தெரிவித்தார்.
இந்த விழா கிராம மக்கள் அனைவரும் கல்விக்காக ஒன்றிணைந்து செயல் படும் போது, சிறு பள்ளிகளும் பெரிய கனவுகளுக்கும் வளமாக மாறும் என்பதை மீண்டும் நிரூபித்தது. உலையூர் கிராமம் இன்று கல்விக்காகக் கைகோர்த்த பெருமைக்குரிய நாளாக அமைந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!