தமிழகம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) அமைப்பின் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீட் மற்றும் நெட் தேர்வுகளில் நடந்த குளறுபடிகளை கண்டித்தும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

25views
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) அமைப்பின் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீட் மற்றும் நெட் தேர்வுகளில் நடந்த குளறுபடிகளை கண்டித்தும் மாவட்ட தலைவர் படூர் எஸ் அல்லா பகஷ் அவர்களின் ஆலோசனையின் பேரில் 29 06 2024 சனிக்கிழமை காலை11 00 மணி அளவில் காஞ்சிபுரம் ரயில்வே ரோடு ஒன்றிய அரசின் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அஞ்சல் நிலையம்( Head Post Office) முன்பு மாவட்டச் செயலாளர் ஏ அஸ்லம் பாஷா அவர்கள் தலைமையில் MSF மாவட்டத் தலைவர் எப் அப்ரோஸ், IUML மாநில பொதுக்குழு உறுப்பினர் எ அக்பர் பாஷா, மாவட்ட துணைத் தலைவர்கள் ஜே எஸ் முபாரக் அலி, எஸ் கே அல்லா பிச்சை, எஸ் எம் முஸ்தபா, காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஏ உஸ்மான் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கண்டன உரையாற்றி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் “குளறுபடி குளறுபடி நீட் தேர்வு குளறுபடி…!!!” நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்குக…!!! ரத்து செய்! ரத்து செய்!! நீட் தேர்வை ரத்து செய்..!!! உள்ளிட்ட வாசகங்களை அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திக் கொண்டும், நீட் மற்றும் நெட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், தேசிய தேர்வு முகமையை விசாரணைக்கு உட்படுத்த கோரியும், கல்வியை மாநில பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தை யோட்டி காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலாஜாபாத் நகர செயலாளர் ஏ ஜாவித் பாஷா, வாலாஜாபாத் எம் எஸ் எப் நகர செயலாளர் என் சலாவுதீன், ஏ பாசில், காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி தலைவி ஆபிதா இம்ரான் மகளிர் அணி ஹசீனா பேகம், நூர்ஜஹான், காஞ்சிபுரம் அம்ஜத், அப்சல், அசிம், முகமது கான், ரஹீம், வெங்கடேசன், இப்ராஹிம், காலேஸா, ஆதம் பாஷா, சாதிக் பாஷா, ஜாஃபர் உசேன், அசன் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!