தமிழகம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் (MJK) மாநில துணைச் செயலாளர், மாவட்ட செயலாளர், மாநகர செயலாளர் ஆகியோர் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

541views
மனிதநேய ஜனநாயக கட்சியின் (MJK) மாநில துணைச் செயலாளராக பொறுப்பேற்று கொண்ட அண்ணன் ஓசூர் நவ்ஷாத், மாவட்ட செயலாளராக முஹம்மத் உமர், மாநகர செயலாளராக முஹம்மத் அப்சல் ஆகியோர் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் Dr.A.செல்லகுமார் M.B.B.S., M.P அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி மக்களின் கனவு திட்டமான ஜோலார்பேட்டை கிருஷ்ணகிரி மார்க்கமாக ஓசூர் ரயில் பாதைக்கு இந்திய ரயில்வே ஆணையம் ஒப்புதல் அளித்து இத்திட்டத்தின் விரிவான அறிக்கைக்கு(DPR) சுமார் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்திக்கும்.

ஓசூர் மாநகர அரசு உருது மேல்நிலைப்பள்ளியில் கலையரங்கம் கட்ட ரூ.15,00,000 (பதினைந்து இலட்சம்) நிதி ஒதுக்கியதற்கும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!