மதுரை பெண்கள் கல்லூரி வாசலில் குடிகாரர்கள் கலாட்டா மாணவியின் தந்தையை அடித்து உதைத்ததால் பரபரப்பு…
மதுரை பெண்கள் கல்லூரி வாசலில் குடிகாரர்கள் கலாட்டா மாணவியின் தந்தையை அடித்து உதைத்ததால் பரபரப்ப. நேற்று (03/11/2022) மாலை சுமார் 4 மணியளவில் மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி சாலையில்,இராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து அமரர் ஊர்தி ஒன்று வந்தது. அந்த அமரர் ஊர்தி முன்பாக பல இளைஞர்கள் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் ஹார்ன் அடித்து கொண்டும் கத்தி கொண்டும் கொண்டும் அதி வேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததனர். அந்த சாலையில் சென்றவர்கள் அனைவரும் பீதியாகி ஓடி சென்றனர்.
இதனை கண்ட மீனாட்சி கல்லூரியில் பயிலும் தன் மகளை அழைத்து செல்ல வந்த ஒரு தந்தை அவர்களை பார்த்து “ஏம்பா இப்படி போறீங்க, கத்தாம போகலாம்ல” என்று கூறியுள்ளார்.
உடனே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்த அந்த இளைஞர் கூட்டம் தன் மகளின் கண் முன்பாகவே அந்த தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளது. இதனால் அந்த தந்தை பலத்த காயமடைந்துள்ளார். கல்லூரி வாசலிலேயே நடந்ததால் கல்லூரி மாணவிகளும் அலறியடித்து ஓடியுள்ளனர்.
பட்டபகலில் மதுரையின் மையமான கோரிப்பாளையத்தில் இவ்வாறு நடந்தது சட்டம் ஒழுங்கு கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்து செல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்








