செய்திகள்தமிழகம்

மதுரை மாநகராட்சி சார்பில், ரத்ததான முகாம்..

46views

மதுரை: மதுரை மாநகராட்சி அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்,  இரத்த தான முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த், தொடங்கி வைத்தார். மதுரை மாநகராட்சி அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைத்தில், இரத்த தான முகாமினை, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழாவானது, மாநில அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டத்திற்கும் நூற்றாண்டு ஜோதி வலம் வருகிறது. மதுரை மாவட்டத்தில் எதிர்வரும் (05.11.2022) அன்று ஜோதி வரவுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட இரத்ததான முகாமினை, மேயர் ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். மேலும், மாநகராட்சி பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் கோலப் போட்டிகள் நடைபெற்றது. மருத்துவமனை வளாகத்தில் பணியாளர்களால் வரையப்பட்ட விழிப்புணர்வு கோலத்தினை, மேயர் ஆணையாளர் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி நகர்நல அலுவலர் மரு.வினோத் குமார் மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உதவி நகர் நல அலுவலர் மரு.தினேஷ்குமார் மாமன்ற உறுப்பினர் மகாலெட்சுமி மண்டல மருத்துவ அலுவலர்கள் சுகாதார பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!