தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாரம் பேரூராட்சி தலைவர் சுஜிதா மேரி தலைமையில் நடைபெற்ற தீர்மான கூட்டத்தில் 18 கவுன்சிலர்களில் அதிமுக,திமுக,அமமுக, சுயட்சை உள்ளிட்ட அனைத்து கட்சியின் 11 கவுன்சிலர்கள் பேரூராட்சியில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி தீர்மானத்தை நிறைவேற்றாமல் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு

1.29Kviews
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இதில் அதிமுக 3  ,திமுக 10 ,அமமுக 1,காங்கிரஸ் 1, சிபிஎம் 1,சுயட்சை 2 உள்ளிட்ட மொத்தம் 18 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று மம்சாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சுஜிதா மேரி தலைமையில் தீர்மானக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு வாசிக்கப்பட்டன. இந்நிலையில் மம்சாபுரம் பேரூராட்சியில் பதிவு செய்யப்பட்ட மாதத்திய பிறப்பு இறப்பு மற்றும் பேரூராட்சியின் வரவு செலவுகளுக்கான இரண்டு தீர்மானங்கள் மற்றும் நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ள எட்டு தீர்மானங்களில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக துணைத் தலைவர் உள்பட அதிமுக,திமுக,அமமுக,சிபிஎம்,சுயட்சை உள்ளிட்ட அனைத்து கட்சியைச் சார்ந்த 11 கவுன்சிலர்கள் தீர்மானங்களை நிறைவேற்றாமல் பேரூராட்சி அலுவலரிடம் புகர் அளித்து வெளிநடப்பு செய்தனர்.மேலும் இதுவரை நடைபெற்ற 9 தீர்மான கூட்டங்களில் 8 தீர்மான கூட்டங்களுக்கு கவுன்சிலர்களிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்கவில்லை எனவும் அதற்கான பணிகள் ஊழலுடன் நடைபெற்றதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து மூன்று கூட்டங்களை அனைத்து கட்சி கவுன்சிலர்கள் நிராகரிப்பு செய்தால் பேரூராட்சி மன்ற தலைவர் சுஜிதாமேரி மீது நம்பிக்கையில்லாத தீர்மானத்தை கொண்டு வந்து மம்சாபுரம் பேரூராட்சி மன்றத்தில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க போவதாக கூறப்படுகிறது.
திமுக கட்சியில் உட்கட்சி பூசலால் மம்சாபுரம் பேரூராட்சியில் ஊழல் நடைபெற்றது அம்பலமாகி உள்ளது. இந்த தீர்மான கூட்டத்தில் 11 கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!