தமிழகம்

மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை ஜூலை 15ல் தாக்கல் செய்யப்பட உள்ளது – திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தகவல்

30views
மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் குறித்து திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தலைமையிலான அதிகாரிகள் குழு திருமங்கலம், தோப்பூர், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறுகையில்,  “மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மண் பரிசோதனை உள்ளிட்ட 90 சதவித பணிகள் முடிவுற்றநிலையில் திட்ட அறிக்கையின் இறுதிக்கட்ட குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள மாசி வீதிகளில் தேரோட்டம் பாதிக்கப்படாத வகையிலும் மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் பழமையான கட்டிடங்கள் சேதம் அடையாத வகையிலும் ரயில் நிறுத்தத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம். வைகை ஆறு முதல் கோரிப்பாளையம் வரையும் சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் சற்று தாமதமாகும். வைகையாற்று பகுதிகளில் பாறை பகுதிகளில் மெட்ரோ பாதை அமைப்பதால் எந்தவித அச்சமும் இன்றி மெட்ரோ ரயில் பாதையில் இயக்கப்படும். ஜூலை 15 அன்று விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம்” என்றார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!