தமிழகம்

சிந்தாமணி பதுமை அந்தோணியார் ஆலயத்தில் 75 ஆம் ஆண்டுதிருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

35views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி சூசையப்பர் புரத்தில் உள்ளபதுமை புனித அந்தோனியார் ஆலயத்தில் 75 ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பிரசித்தி பெற்ற பதுமை புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் செயின் மேரிஸ் பேராலய பங்குத்தந்தைகள்மரியநாதன் விஜயின் ஜோசப் அலெக்ஸாண்டர் ஆகியோர் தலைமையில் கொடியினை ஊர்வலமாக கொண்டு வந்து பதுமை புனித அந்தோணியார் ஆலயத்தில் ஏற்றினர் 13 நாட்கள் நடைபெறும் விழாவில் சமய சார்பின்றி ஏராளமான இந்துக்களும் கலந்து கொண்டனர்.
தினமும் காலை நவநாள் பிரார்த்தனையும் மாலை 6 மணியில் திருப்பலியும் நடைபெறும்.  வரும் 1ஆம் தேதி புனித அந்தோனியாரின் திருவுருவச் சிலை புனித மரியன்னை பேராலயத்தில் இருந்து ஊர்வலமாக பதுமை அந்தோணியார் ஆலயத்திற்கு வந்தடையும். செல்லும் இதில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி சுற்றுப்புறங்களில் உள்ள சிந்தாமணி ‘ சாமநத்தம், பனையூர் ,மேல அனுப்பானடி வில்லாபுரம் போன்ற பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். நடைபெறும் பதுமை புனித அந்தோணியர் ஆலய திருவிழாவில் இந்துகளும் பெருமளவில் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!