தமிழகம்

குறுகலான இடத்தில் சிக்கிய சினை பசுமாடு ஒரு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்

73views
மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு ஜே ஜே நகர் பகுதியில் நாகேந்திரன் என்பவர் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் வீட்டின் அருகே சுமார் அரை அடி அளவு கொண்ட குறுகலான பாதை ஒன்று உள்ளது. அதில் எதிர்பாராத விதமாக சினை உள்ள பசுமாடு சிக்கிக் கொண்டது. அவர்கள் எவ்வளவோ முயன்றும் பசுமாட்டை வெளியே கொண்டு வர முடியவில்லை. நின்று கொண்டு இருந்த பசு மாடு நிலை தடுமாறி திடீரென அமர்ந்து விட்டது. இதனால் மாட்டை அவர்களால் தூக்கவும் முடியவில்லை. உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் மாட்டின் உரிமையாளர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலர் முகமது சலீம் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இரு பக்க சுவற்றையும் உளி மற்றும் மரம் அறுக்கும் எந்திரம் கொண்டு சுவற்றின் இரு பக்கமும் உடைத்து அகலத்தை ஏற்ப்படுத்தி மாட்டின் மீது இன்ஜின் ஆயில் ஊற்றி சுமார் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மாட்டை மெதுவாக வெளியே எடுத்தனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டினை தெரிவித்தனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடிய அந்த மாடு பத்திரமாக மீட்கப்பட்டது. மாட்டு உரிமையாளர்கள் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தனர்.
செய்தியாளர் ; வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!