தமிழகம்

“தெரு பெயர் போடு புதுசா இருக்கு. போர்டு வார்டு நம்பர் தான் தப்பா இருக்கே”

113views
மதுரை மாநகராட்சியில் சுமார் 100 வார்டுகள் உள்ளன இதில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் 75 மட்டுமே இருந்தது பின் வார்டு வரவேறையை செய்யப்பட்டு 100 வார்டுகளாக மாற்றப்பட்டது.   அப்பொழுது வார்டு எண்ணங்களும் மாற்றப்பட்டன. மீண்டும் திமுக ஆட்சி வந்த பின் மறு வரையறை செய்யப்பட்டு வார்டு எண்கள் மாற்றப்பட்டன.  தற்பொழுது மதுரை மாநகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் தெருப் பெயர்கள் உடன் மண்டல எண் மற்றும் வார்டு எண் உடன் பெயர் பலகை வைக்கப்படுகிறது.
இதில் ஒரு சில இடங்களில் வார்டு எண்ணங்களை சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் இருந்த வார்டு வார்டு எண்களை கொண்டு புதிய தெரு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.  இதில் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71 வது வார்டு பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு என்ற பகுதியில் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு வார்டு எண் 67 என குறிப்பிட்டு மண்டலம் 3 எனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.  ஆனால் அது கடந்த முறை வார்டு நம்பர் 75 ஆகவும் தற்பொழுது 71 ஆகவும் மாறி உள்ளது. இதை கூட கவனிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவது மக்களை குழப்புவதாக இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், தற்பொழுது பல்வேறு பகுதிகளில் வார்டு எண்கள் மாற்றப்பட்டுள்ளது இதனால் அப்பகுதி மக்களுக்கு சிலருக்கு வார்டு நம்பர்கள் குழப்பத்தில் உள்ளனர் தற்பொழுது தற்பொழுது புதிதாக வைக்கப்பட்டுள்ள போர்டுகளில் இது போன்று குழப்பங்கள் இருப்பதால் மேலும் மக்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். தெரு பெயர் பலகை வைக்கும் பொழுது வார்டு கட்டாயமாக வார்டு எண்ணெய் சரிபார்த்து வைக்க வேண்டும் எனவே இது போன்று எங்கெங்கு வார்டு எண் தவறாக உள்ளது.  அதை ஸ்டிக்கர் ஒட்டியாவது மறைத்து அந்த பகுதி வார்டு எண்களை சரி செய்ய வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!