தமிழகம்

தேசிய டியூபால் போட்டி. தமிழக வீரர் வீராங்கனைகள் இறுதிப் போட்டியில் வெற்றி : மதுரை ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து வரவேற்பு

58views
இந்திய டியூபால் சங்கம் நடத்திய 9வது சீனியர் தேசிய அளவிலான டியூபால் போட்டிகள் டெல்லி மாநிலத்தில் பிப்ரவரி 7 முதல் 10 வரை நடைபெற்றது அதில் தமிழ்நாடு டியூபால் சங்கம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் தமிழக டியூபால் அணி தேர்வு செய்யப்பெற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் விளையாடினர். இதில் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 30 க்கும் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் தென்னிந்திய டியூபால் சங்கத்தின் தலைவராக கேசி. திருமாறன்.ஜி உள்ளார்..இதில் தஞ்சாவூர் விஷ்ணு ஸ்ரீ மதுரை மோகனா ஷாலினி வானவி, கோல்ட் கீப்பர் மதுரை தரணி, ஆதிரை யுவஸ்ரீ திருச்சி ஜனனி தேனி லிபிகா தர்ஷினி விருதுநகர் கீர்த்தனா சிவகங்கை ஹரிணி தூத்துக்குடி பொன்ராதா மற்றும் ஆண்கள் பிரிவில் மதுரை பாலமுருகன் பாலசுந்தர் சஞ்சய் அகிலன் சண்முகநாதன் விழுப்புரம் பிரவீன் இளஞ்செழியன் கடலூர் ராஜசேகர் திருநாவுக்கரசு புதுக்கோட்டை அபினேஷ் சுந்தர் வேலூர் தனுஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு டெல்லியில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றனர்.  இவர்கள் அனைவருக்கும் பயிற்சியாளராக சத்தியசீலன் . தஅஸ்வின் ஆகியோர் இருந்தனர்.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அளவில் முதலிடம் பெற்றனர். இந்திய அளவில் முதலிடம் பெற்ற தமிழக அணி வீரர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் மூலம் மதுரைக்கு வந்தனர் மதுரை ரயில் நிலையத்தில் உசிலம்பட்டி தேவர் கல்லூரி செயலாளர் வாலாந்தூர் பாண்டியன் மதுரை பாரதி யுகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு மற்றும் பலர் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். மதுரை மாவட்ட செயலாளர் குபேந்திரன் மற்றும் நடராஜன் ஆகியோர் தேர்வு குழு உறுப்பினர்களாக இருந்தனர்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!