தமிழகம்

விழிப்புணர்வு மாரத்தானை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

38views
மதுரை அரசரடி ரயில்வே விளையாட்டு மைதானம் மற்றும் மதுரை ரயில்வே காலனி நில பாதுகாப்பு குழு சார்பில் “மாரத்தான் அல்ல மதுரைக்காகத்தான்” என்ற முழக்கத்துடன் ரயில்வே நிலம் மற்றும் மைதானத்தை பாதுகாக்கும் விதமாக இன்று அதிகாலை விழிப்புணர்வு மாரத்தான் அரசரடி யு. ஜி. பள்ளி மைதானத்தில் மதுரை ரயில்வே காலனி நில பாதுகாப்பு குழு செயலாளர் பால்ச்சாமி தலைமையில் நடைபெற்றது.
அரசரடி யு.சி. பள்ளி மைதானத்தில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு மாரத்தான் அரசரடி மெயின் ரோடு வழியாக பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலைய சந்திப்பு, சேதுபதி பள்ளி சாலை, மதுரை கோட்ஸ் மேம்பாலம், கரிமேடு புது ஜெயில் ரோடு சாலை, அரசரடி வழியாக ரயில்வே விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

நிறைவாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு‌.வெங்கடேசன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க மூத்த துணைத் தலைவர் சோலை எம். ராஜா, மதுரை தடகள சங்கத் தலைவர் ஜி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மாரத்தானில் பங்கெடுத்த வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்வில் அப்பல்லோ மருத்துவமனை செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி ராஜேஷ், மதுரை ரயில்வே நில பாதுகாப்பு குழு பொருளாளர் ஆர். சுடலைமுத்து, உப தலைவர் எஸ். ராஜாராம் மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனச்செல்வம், மாமன்ற உறுப்பினர்கள் டி. குமரவேல், வை. ஜென்னியம்மாள் ஆகியோர் பங்கெடுத்தனர்.

மதுரை ரயில்வே நில பாதுகாப்பு குழு நிர்வாகிகள் இரா. லெனின், சுப்புராம், டி. ரஜேதிரன், ஏ. பாண்டி, சரவணக்குமார், முத்துபாண்டி, கு. கணேசன், பி. ஜீவா, க. பாலா, சிலம்பள்ளி ஆசிரியர் வடிவேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க. நீதிராஜா, அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டத் தலைவர் நா. சுரேஷ்குமார், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி, சிஐடியு மாவட்ட தலைவர் தெய்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!