தமிழகம்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மதுரைக்கோட்டம்

144views
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், மதுரைக்கோட்டத்தின் மூலம் அயோத்திதாச பண்டிதர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மேலவாசல் திட்டப்பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் (480+544) அடுக்குமாடி குடியிருப்புகளின் (மூன்று மாடி) பழுது மற்றும் மராமத்து பணிகள் ரூ. 201.24இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 480 குடியிருப்புகளுக்கு தண்ணீர் வசதி,பூங்கா, குடியிருப்புகளுக்கு இடையே CC Pavement மற்றும் கழிவுநீர் ஓடை சீரமைப்பு போன்ற பழுது மற்றும் மராமத்து பணிகள் ரூ.82.47 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும், 544 குடியிருப்புகளுக்கான சீரமைப்பு பணிகள் ரூ.118.77 இலட்சம் மதிப்பிட்டில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மாண்புமிகு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அயோத்திதாச பண்டிதர் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படவிருக்கும் பழுது மற்றும் மராமத்து பணிகளை துவக்கி வைத்துள்ளார்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!