தமிழகம்

உலக பத்திரிகையாளர்கள் தினம்; மதுரை வாசன் கண் மருத்துவமனையில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம்; வணிகவரி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்

122views
உலக பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. வாசன் கண் மருத்துவமனையுடன் மதுரை செய்தியாளர்கள் சங்கம், பிரஸ் கிளப் ஆப் மதுரை, தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் & தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கத்தினர் இணைந்து இந்த முகாமை நடத்தினர்.
வணிகவரி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். வரும் காலங்களில் பத்திரிகையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும், பத்திரிகையாளர் அடையாள அட்டை வைத்திருப்போரும் மருத்துவமனையை அணுகினால் 50 சதவீத சலுகை கட்டணத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் கையெழுத்தானது.
முகாமில், பத்திரிகையாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பதிவு செய்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். முகாமிற்கு வாசன் மருத்துவமனையின் தலைமை மருத்துவ இயக்குனர் மருத்துவர் கமல்பாபு முன்னிலை வகித்தார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வெங்கடேசன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அரசு பிளீடர் பி.திலக்குமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்பு நிதி, மதுரை அரசு ராசாசி மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை பிரிவு துறைத் தலைவர் ஆர்.பிரபாகரன், மதுரையின் அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் எஸ்.கதிரவன், எஸ்.ரமேஷ் பாண்டியன், கே.சுப்பிரமணியன், ஏ.பி.ஹரிகரன், எஸ்.ஆர்.குமரன், டி.சண்முகம், சி.எம்.ஆதவன், எஸ்.ஜெயபிரகாஷ், கொ.காளீஸ்வரன், எஸ்.ஜெகநாதன், கே.காசிலிங்கம், எம்.பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கண் மருத்துவர் கீதா நன்றி தெரிவித்து பேசினார்.
மருத்துவமனையின் மார்க்கெட்டிங் பிரிவு தென்மண்டல மார்க்கெட்டிங் தலைவர் விஜயன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!