தமிழகம்

மதுரையில் கல்லறை திருநாளை முன்னிட்டு கல்லறைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிராத்தனை

175views
உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தில் இறந்தோரை என்றும் மறப்பதில்லை என்பதற்கேற்ப ஆண்டு தோறும் நவம்பர் 2 ஆம் நாளை கல்லறை திருநாளாக கடைபிடிக்கிறார்கள்.   அன்றைய நாளில் தங்கள் குடும்பங்களில் இறந்த மூதாதையர்கள், பெற்றோர், உறவினர்கள் கல்லறைகளுக்கு குடும்பத்தோடு சென்று கல்லறைகளை புதுப்பித்து மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிற்க்காக வேண்டுதல் செய்து விட்டு வருவது வழக்கம்.
மேலும் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தயார் செய்து ஏழைகளுக்கு கொடுப்பது, உடைகள் கொடுப்பது போன்ற வகையில் கிறிஸ்தவர்கள் இந்த கல்லறை திருநாளில் தங்கள் உறவுகளை நினைவு கொள்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் பங்கு ஆலயங்களைச் சேர்ந்த அனைத்துக் கல்லறைகளிலும் பங்கு ஆலய அருட்தந்தையர்களால் இறந்தவர்களின் ஆன்ம இறைப்பாற்றிற்காக கல்லறையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!