தமிழகம்

நடிகர் சூரியின் சொந்த கிராமம் கோயில் திருவிழாவில் நடிகர் விஜய் சேதுபதி அமைச்சர் மூர்த்தி பிரபலங்கள் பங்கேற்பு

67views
மதுரை அடுத்துள்ளது இராஜாக்கூர் கிராமம்.  இது பிரபல நடிகர் சூரிக்கு சொந்தமான கிராமம். இந்த கிராமத்தில் அருள்மிகு காளியம்மன் கோயில் ஆண்டுதோறும் ஆடி மாசம் திருவிழா நடப்பது வழக்கம். இந்த வருடம் ஆடி மாதத்தில் கோவில் திருவிழா கோயில் வளாகத்தில் நடைபெற்றது.  இந்த ஆண்டு நடைபெற்ற கோயில் திருவிழாவை அவர் நடத்தினார்.
இந்த விழாவில் முன்னணி பிரபல திரைப்பட நடிகர் மக்கள் செல்வர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து நடிகர் சூரி வீட்டுக்கு சென்று முன்னதாக பொதுமக்களுக்கு அவர் கைகுலுக்கி கையில் முத்தமிட்டார். இதனால் நடிகர் சூரி வீட்டிற்கு முன்பு பொதுமக்கள் ஏராளமான திரண்டனர். அதேபோல் விஜய் டிவி புகழ், வணிகவரி துறை மற்றும் பத்திர துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நடிகர் சூரியுடன் சேர்ந்து சாப்பிட்ட்டனர். இதில் திமுக முக்கியமான நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!