தமிழகம்

மதுரை அருகே அனுமதி இன்றி குவாரி அமைத்து செம்மண் அள்ளுவதால் தரிசாகும் விவசாய நிலங்கள் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

64views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பன்னியான் கிராமத்தில், உள்ள பெரியகுளம் கண்மாயில் அரசு அனுமதியின்றி கிராவல் குவாரி அமைத்து செம்மண் மற்றும் கிராவல் மண் அள்ளுவதால் விவசாய நிலங்கள் பாழ் படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை, தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அனுமதியின்றி குவாரி அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டி ஒன்றியம் பணியான் கிராமத்தில் உள்ள பெரியகுளம் கண்ணமாயில் மூன்று, நான்கு வருடங்களாக தொடர்ந்து கனிமவளக் கொள்ளையில் பன்னியான் அரசு அதிகாரிகளின் உதவியோடு சிலர் இரவு நேரத்தில் விவசாயிகளின் அடிவயிற்றில் கை வைக்கும் விதமாக கண்மாயினை தனி நபர்களுக்காக அரசு அனுமதியின்றி கிராவல் குவாரியாக அமைத்துக் கொடுத்து செயல்பட்டு வருகின்றனர்
இது போன்று மண்ணிணை அள்ளுவதால் மழை காலத்தில் கண்மாயில் தண்ணீரை சேமிக்க முடியாமல் கண்மாயின் கரைப் பகுதி உடைந்து, விவசாய பயிர்கள் மற்றும் விளை நிலங்கள் மற்றும்,சூற்றுச்சுழல் பாதிக்கப்படுவதுடன், கண்மாயின் உட்பகுதியில் உள்ள மரங்கள் அழிக்கப்படுவதால் இந்தப் பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இது போன்ற காரணத்தினால் விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் அரசு அதிகாரிகளே, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைக்கு உடந்தையாக செயல்பட்டு வருவதால்,  இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
அனுமதி இன்றி குவாரி அமைத்தவர்கள் இரவு பகல் என பாராமல்கிராவல், செம்மண், கிணற்று மண் என அள்ளுவதால் இரவு நேரத்தில் பன்னியான், கீழப்பட்டி, கழுங்கப்பட்டி, கண்ணணூர் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை மற்றும் விவசாயத்திற்க்கு தண்ணீர் பாய்ச்ச செல்ல முடியாத நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். ஏனென்றால் கிராவல் மண்களை அள்ளிச் செல்பவர்கள் குண்டர்களை வைத்துக்கொண்டு கனரக வாகனத்தை அதிவேகமாக இயக்கி வருவதால் இரவு நேரத்தில் ரோட்டோரத்தில் உள்ள வீடுகளில் ஆடு, மாடுகளை வைத்திருப்பவர்கள் உயிர் பயத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகையால் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு அனுமதி இன்றி குவாரி நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இந்தப் பகுதி விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராடும் நிலை உருவாகும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!