தமிழகம்

நேபாளத்தில் நடைபெற்ற தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்ற ஏழை மாணவனுக்கு சொந்த ஊரில் வரவேற்பு : இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக பேட்டி

29views
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே.மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், கவிதா இவர்களின் மகன் விக்னேஷ் 22. இவர் நேபாளத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும் வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.இவருக்கு சொந்த கிராமத்தில் கிராமமக்கள் மற்றும் உறவினர் சார்பாகவரவேற்பு நடந்தது.
இதுகுறித்து விக்னேஷ் கூறியதாவது நான் விக்கிரமங்கலம் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து. உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் பிஎஸ்சி படித்துள்ளேன்.ஆரம்பத்திலிருந்து விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் எனக்கு விளையாட்டில் உயர்ந்த அளவில் பரிசு பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.எங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் வெளியில் சென்று தனியாக பயிற்சி எடுக்க வசதி இல்லை ஆகையால் காலை மற்றும் மாலை வேலைகளில் கிராமத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஓடி பயிற்சி பெற்றேன்.
அதன் பலனாக.தஞ்சாவூர் மாவட்டத்திலும், காஷ்மீரிலும் பரிசு பெற்றேன். அதனைத் தொடர்ந்துகார்ட்ஸ் கிளப்,ஒய். எஸ்.பி.ஏ.அசோசியன் சார்பாக நேபாளத்திற்கு சென்று அங்கு நடந்த விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், 400மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கமும் பெற்று வந்துள்ளேன். இந்திய ராணுவத்தில் சேர விரும்புகிறேன். என் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதால் அரசு எனக்கு உதவி செய்தால் இன்னும் திறமையாக விளையாடி அரசுக்கும் நாட்டிற்கும் நல்ல பெயர் எடுத்துக் கொடுப்பேன் என்று தெரிவித்தார். இவருக்கு கிராமமக்கள்,உறவினர்கள் ஆகியோர் பட்டாசு வெடித்து மாலைகள்,சால்வைகள் அணிவித்து வரவேற்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!