தமிழகம்

மழையால், விழுந்த மரங்களை அகற்றும் பணி திவீரம்

32views
மதுரை மாநகராட்சி மழை மற்றும் காற்றினால் சாய்ந்த மரங்களைஅகற்றும் பணிகளை , மேயர் இந்திராணி பொன்வசந்த்  பார்வையிட்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 புதுஜெயில் ரோடு பகுதியில், மழை மற்றும் காற்றினால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகளை,  மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார்,   பார்வையிட்டனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில்,  பரவலாக பெய்து வருகிறது.
 மதுரை மாநகராட்சி பகுதிகளில், கடந்த ஒரு வார காலமாக மிதமான அளவில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை தல்லாகுளம், மாட்டுத்தாவணி, தமுக்கம், கோரிப்பாளையம், ஆரப்பாளையம், திருப்பரங்குன்றம், அரசரடி, திருநகர், வில்லாபுரம் உள்ளிட்ட மாநகரில் பல்வேறு பகுதிகளில்  அதிக காற்று வீசியும் மழையும் அதிகளவில் பெய்துள்ளது.
இந்த புயல் காற்றினால், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
இதில், இரவோடு இரவாக மாநகராட்சி , மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இணைந்து சாய்ந்த மரங்கள்  அகற்றும் பணி நடைபெற்றது.   மேயர, ஆணையாளர், ஆகியோர் புது ஜெயில் ரோடு பகுதிகளில் மழை மற்றும் புயல்காற்றினால் வேரோடு சாய்ந்த விழுந்த மரங்களின் இடத்தை பார்வையிட்டார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  வேரோடு சாய்ந்த சுமார் 20 க்கு மேற்பட்ட மரங்கள் மற்றும் சாய்ந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தி விரைந்து பணிகளை மேற்கொண்டு  அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது, தலைமைப் பொறியாளர் ரூபன் சுரேஷ், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி ஆணையாளர் மனோகரன், உதவி செயற் பொறியாளர் சேகர், உதவிப்
பொறியாளர்கள் சுகாதார அலுவலர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர்  கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!