தமிழகம்

மதுரை மாநகரில் சாலைகளின் அவல நிலை: மழைக்கு சாலை குண்டு குளியுமாக காட்சியளிக்கிறது.

44views
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ,மதுரை அண்ணா நகர் மேலமடை வீரவாஞ்சிதெரு, காதர் மொய்தீன் தெரு ,மருது பாண்டியர் தெரு, அன்பு மலர் தெரு, கோமதிபுரம் ஜூபிலி டவுன் ,தாழை வீதி, திருக்குறள் வீதி குருநாதர் தெரு, ஆகிய தெருக்களில் குடிநீர் பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு ,  சரிவர மூடப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில் அவ் பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால், அவ்வழியாக பாதுசாரிகளும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் கால் இடறி கீழே விழுகின்ற நிலை ஏற்படுகிறது.
இது குறித்து ,மதுரை மாநகராட்சி அலுவலர்களிடம் இடம் புகார் தெரிவித்தும், சாலைகளில் தோண்டப்படும் குழிகளை சரிவர மூடப்பட ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், சாலையில் தோண்டும் போது கால்வாய் கழிவு செல்லும் குழாய்களில், உடைப்பு ஏற்பட்டு அதுவும், மழை நீருடன் சங்கமிக்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது .

மேலும், மதுரை மாநகராட்சி ஆனது கழிவுநீரை வைகை ஆற்றில் சென்று களப்பதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை வீரவாஞ்சி தெருவில் மற்றும் காதர்மொய்தீன் தெருவில் பள்ளங்களில் மழைநீர் மற்றும் வெளியேறும் கழிவு நீர் தேங்கி இருப்பதால், இரவு நேரங்களில் விஷசந்துக்கள் நடமாடுவதாகவும், அது பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே ,மதுரை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் ஆணையாளர் விரைந்து நடவடிக்கை எடுத்து, சாலையோர பள்ளங்களை முடியும், சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்போர் சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!