தமிழகம்

கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சித்தலைவருடன் மஜக மாநில துணைச் செயலாளர் சந்திப்பு..!!

87views
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக பதவியேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் IAS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் தலைமையிலான மஜக வினர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
மேலும் வேப்பனபள்ளி பேருந்து நிலையத்தை சீர் செய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மாநில துணைச் செயலாளர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் அன்சர், மாவட்ட செயலாளர் முஹம்மத் உமர், துணைச் செயலாளர்கள் ADS சர்தார், முதல்லிம், மாநகர செயலாளர் அப்சல், பொருளாளர் சாகிப், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் சையத் அஹ்மத் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!