தமிழகம்

பட்டமளிப்பை உடனடியாக நடத்த உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை.

48views
அண்ணா பல்கலைக்கழகம் நீங்கலாக 12 அரசு நடத்தும் பல்கலைக்கழங்களில் இருந்து 9, 29, 542 மாணவர்கள் பட்டம் பெறவில்லை. பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021, 2022ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 2 முறை அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் நேரம் கிடைக்காதன் காரணமாகவே பட்டமளிப்பு விழா தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்திலும் 2 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் உள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் மெத்தனத்தால் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் படித்த 40000 மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
பட்டமளிப்பு விழா என்பது மாணவர்களின் கல்வி பயணத்தில் மிக முக்கியமான தருணம் படிப்பில் அவர்கள் செலுத்திய கடின உழைப்புக்கும் அர்பணிப்புக்கும், பல்கலைக்கழகத்தில் வைத்து வழங்கப்படும் அங்கீகாரம் தான் பட்டமளிப்பு விழா. பல்கலைக்கழங்களை அமைப்பது நிர்வகிப்பது மாநில அரசின் உரிமை. பல்கலைக்கழகங்களில் காவிக் கும்பலை புகுத்தி சமூகநீதி, சமத்துவ கட்டமைப்பை சிதைக்க முயற்சிக்கிறார் ஆளுநர் அவர்கள்.
உலகளவில் சிறந்து விளங்கும் தமிழ் மாணவர்களின் கல்வி கனவை சிதைக்காமல் அரசியல் சார்பின்றி செயல்பட்டு உடனடியாக ஆளுநர் அவர்கள் பட்டமளிப்பு விழாவை நடத்த உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் சார்பாக தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!