தமிழகம்

விரகனூர் வைகையில் கைவைக்க (தூர்வார) முதல்வருக்கு கோரிக்கை ; கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாராத விரகனூர் மதகு (தடுப்பு) அணையை தூர்வாரக்கோரி விவசாயிகள் முதல்வருக்கு கோரிக்கை

36views
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் 1975 இல் கட்டப்பட்ட விரகனூர் தடுப்பணை  கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மண்மேடாக காணப்படுகிறது.
15 ஆயிரம் கன அடி நீர் சேமிக்கும் நிலையில் உள்ள விரகனூர் மதகு அணை 5 அடி உயரத்திற்கு மண் மேவி சமவெளியாக காணப்படுகிறது.  விரகனூர் மதகு அணையை மழைக்காலம் துவங்கும் முன்பே தூர் வாரி சீரமைத்தால் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் சேமிக்க முடியும்.  அணையிலிருந்து வண்டல் மண்ணை தூர்வாரி விவசாய நிலத்திற்கு உரமாக வழங்கலாம்.  இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும், நீரையும் சேமிக்க வழி கிடைக்கும் என விவசாயிகள் தமிழக முதல்வருக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரகனூரிலிருந்து மேற்கு கால்வாய் மூலம் வெளியேறும் தண்ணீர்  சிலைமான், கொந்தகை,கீழவெள்ளர், மேல வெள்ளுர், சாமநத்தம், பனையூர், உள்ளிட்ட கிராமங்களுக்கு சுமார் 5000 ஏக்கர் பாகன வசதிக்கு பயன்படும்.  கிழக்கு கால்வாய் மூலம் வெளியேறும் தண்ணீர் சக்கிமங்கலம்,, சக்குடி, களிமங்கலம், மணலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.  மேலும் தென்மாவட்டங்களில் கமுதி, பார்திபனூர், பரமக்குடி, இளையாங்குடி, மானாமதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் வரை செல்கிறது.
செய்தியாளர் ; வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!