செய்திகள்தமிழகம்

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம்..

246views

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் சின்ன மாயாகுளம் கிராமத்தில் 29.10.2022 முதல் தொடங்கி 04.11.2022 வரை நடைபெறுகிறது.

இராமநாதபுரம் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன் தலைமையில் சிறப்பு முகாம் துவங்கியது. பள்ளியின் தலைமை ஆசிரியர்  ஜவஹர் பாரூக் முன்னிலை வகித்தார். சின்ன மாயா குளம் கிராமத் தலைவர் ராஜலிங்கம் வரவேற்புரை அளித்தார். ஏழு நாட்கள் நடைபெறும் முகாமில் மரக்கன்றுகள் நடுதல், தூய்மை பணி, சுகாதாரப் பணி, மற்றும் விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றில் மாணவர்கள் பங்குபெறுகின்றனர். முகமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பசீர் அவர்கள் செய்திருந்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!