தமிழகம்

தமிழ்நாடு நாள் உதய தினம் புகைப்பட கண்காட்சி, பேரணி

40views
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை முன்னிலை வகித்தார்.  கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையேற்று புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில் மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரில் இருந்ததன் வரைப்பட தொகுப்புகள், தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்ட வரலாற்று படங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்ட புகைப்படங்களின் கண்காட்சி இடம் பெற்றுள்ளன. ஜூலை 23 வரை நடைபெறும் இக்கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட்டு தமிழ்நாடு வரலாற்று சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டுமென கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். முன்னதாக ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பேரணியை கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்து பங்கேற்றார்.

ஜூலை-18 தமிழ்நாடு பெயர் மாற்றம் குறித்த வரலாற்று சிறப்புகளின் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் 24 பேருக்கு முதல் மூன்று பரிசுகள் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரூ.1. 76 லட்சத்துக்கான பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜுலு, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், உதவி ஆட்சியர் வி.எஸ்.நாராயண சர்மா, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், மண்டபம், ராமநாதபுரம், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் சுப்புலட்சுமி ஜீவானந்தம், பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, தமிழ் வளர்ச்சித்துறை கண்காணிப்பு அலுவலர் செந்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நா.விஜயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக்) பாலாஜி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் டேவிட், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ரவீந்திரன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் கர்ணன், முகவை சங்கமம் செயலர் வான்தமிழ் இளம்பரிதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ்கரன், புதுராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் ஜெரோம் அவர்கள், சாகுல் மீரா, விஜயராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!