தமிழகம்

கீழக்கரையில் கண் பரிசோதனை, பொது மருத்துவ முகாம்

37views
ராமநாதபுரம், ஜூலை 10 – ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் தமுமுக மருத்துவ சேவை அணி, முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம், (MYFA)  மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. கீழக்கரை புதுத்தெரு நூரானியா நர்சரி & பிரைமரி பள்ளியில் நடந்த முகாமிற்கு தமுமுக மாவட்ட துணைத் தலைவர் ரைஸ் இப்ராஹிம் தலைமை வகித்தார். தமுமுக மாநில துணை பொதுச்செயலர் எஸ்.சலீமுல்லா கான் ஆலோசனையில் மமக மாநில செயற்குழு உறுப்பினர் (கீழக்கரை 1-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர்) கீழை முஹமது பாதுஷா ஒருங்கிணைத்தார். இதில் 300 பேர் பயனடைந்தனர்.

கீழக்கரை நகராட்சி நகர்மன்றத் தலைவர் செஹானாஸ் ஆபிதா, கீழக்கரை நகராட்சி 18 வது வார்டு கவுன்சிலர் சகீனா பேகம், புதுத்தெரு சஹீது ஆகியோர் கலந்துகொண்டனர். திருப்புல்லாணி தமுமுக ஒன்றியத் தலைவர் பாசில் நூரி ஆலிம், மர்வான் மாலிக், தமுமுக ஒன்றிய செயலர் யாசர் அரபாத்,மமக ஒன்றிய செயலர் ரமலான் சாஹிப், ஒன்றிய துணை தலைவர் சுரேஷ், முன்னாள் ஒன்றிய துனைத் தலைவர் அப்துல் காதர், முஹமது ஹாரிஸ், கௌது, கவ்னர் நிஜாம், சாகிதீன்ஸ், ஃபவ்சுல் அலியுர் ரஹ்மான், ஆனந்தம் சாகிதீன், முஹமது தாரிக், ராசிக், ரியாஸ் முஹமது சேட், கண்மணி ஜமீல், யூசுப், நிஷார்தீன், இம்தியாஸ், க.இ. அனஸ்தீன், ரத்த உறவுகள் ஹாதில், நூரானியா பள்ளி முதல்வர் ரத்னாபாய் நிர்வாக அலுவலர் பரீதாஸ் சுபைர் ஆகியோர் சேவை ஆற்றினர். மருத்துவக் குழுவினருக்கு தமுமுக மாநிலத் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் எம் எல் ஏ எழுதிய நபிகளாரின் சமூக உறவு புத்தகம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!