தமிழகம்

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி இயந்திர பொறியியல் துறை மாணவர்கள் சாதனை

39views
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி இயந்திர பொறியியல் துறைத்தலைவர் முனைவர். B. ரமேஸ் அவர்களின் வழிகாட்டுதலின் படி கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் M. சரண் ராஜ் மற்றும் S. முஹம்மது யாஷீக் ஆகியோர் சூரிய ஆற்றலை பயன்படுத்தி இயங்கக்கூடிய 12 வாட் திறன் கொண்ட புல் வெட்டும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை பயன்படுத்தி கடினமான பாதைகளில் இருக்கக்கூடிய புற்களை அகற்ற முடியும். மேலும் இந்த இயந்திரத்தை விவசாயத்திற்கும் பயன்படுத்தலாம். இந்த இயந்திரத்தை மொபைல் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய வகையிலும், சுற்றுச்சூழலுக்கு தகுந்தாற் போலவும் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்த மாணவர்களை முஹம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர். முஹம்மது யூசுப், செயலாளர் சர்மிளா, நிர்வாக இயக்குநர் ஹாமீது இப்ராஹிம், இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா, கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர். செந்தில்குமார், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!