கவிதை

குடை

354views
மழை நாளில்
குடை ஒன்றில் நிமிர்கின்றோம்
விரிந்த சிறகினை
பறக்க விடாமல் பிடித்துக்கொள்கின்றோம்.
குடை கம்பிகள்
பறவையின் விலா எலும்புகளைப்போல் காட்சியளிக்கின்றன.
பலத்தக் காற்றில்
அது பிய்ந்துபோவதைப்
பார்க்கும்போது
மிகுந்த நம்பிக்கையோடு
கைகளில் வந்தமர்ந்த பறவை ஒன்று
செத்துப்போனதைப்போல்
மனம் பதறுகிறது .
பாரிகபிலன்

1 Comment

  1. பறவையையும் குடையையும் ஒப்பிட்டிருப்பது மிக அருமை. கவிஞரின் மென்மையான உணர்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பு.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!