தமிழகம்

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 149 -ஆவது பிறந்தநாள் விழா

75views
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 149 -ஆவது பிறந்தநாள் கவிமணி மாணவனாக கல்வி கற்று பின்னர் ஆசிரியராக பணி செய்த கவிமணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக தலைமை ஆசிரியை கவிதா தலைமையில் நடைபெற்றது.
கவிமணியின் பிறந்தநாள் விழாவில் அரசியல் பிரமுகர்களும் மக்கள் பிரதிநிதிகளும் தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் புலவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் முக்கியஸ்தர்களும் மற்றும் தேரூர் வேலப்பன் ,வன்னிய பெருமாள் இளங்கோ, வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன், ஸ்ரீ பிள்ளையார் நைனார், ஜாக்சன், சந்திரசேகர், வீரபத்திரன், கேப் கல்லூரி நிர்வாகி ரெனின், கோபு வடிவீஸ்வரன் செல்வகுமார் , தேரூர் கவிமணி நற்பணி மன்ற பொருளாளர் புலவர் சிவதானு ,ரொட்டேரியன் தமிழ்செல்வி , திரைப்பட தயாரிப்பாளர் நஸ்ரேத் பஸ்லியான், தென்குமரி கல்விக்கழக நிர்வாகி ராஜன், திருவள்ளுவர் அறக்கட்டளை ஜான் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தேரூர் கவிமணி நற்பணி மன்றத்தின் தலைவரும் கவிமணியின் கொள்ளு பேரனுமான மருத்துவர் தி கோ, நாகேந்திரன் சமூக சேவகர் விழாவை ஒருங்கிணைத்து கூறுகையில் அனைத்து அனைத்து மாட மாளிகையிலும் அரசு அலுவலகங்களிலும் மக்கள் ஆட்சி நடைபெறுகின்ற இடங்களிலும் நமது தேசியக்கொடி பறக்க வேண்டும் என்று தீர்க்கதரிசியாக சுதந்திரத்திற்கு முன்னரே கூறியவரும் மாற்று மொழியில் உள்ள பொக்கிஷங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்த்தும் வருங்கால சந்ததியினருக்கு பல அறிய அறிவூட்டும் கவிதைகளையும் கட்டுரையும் தமிழில் தந்த வரும் மகளிர், தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் சமத்துவ உரிமைக்காக சாதி சமய இன வேறுபாடு இன்றி குரல் கொடுத்தவரும் கன்னியாகுமரியில் நடந்த முதல் மொழி வாரிய மாநாட்டிற்கு நல்லாசி வழங்கி முன் நின்று நடத்தியவரும் கல்வெட்டு மூலம் உரிய சான்றுகளை வெளியில் கொண்டு வந்தவரும் சமத்துவ சமுதாய சீரமைப்பிலும் ஏழை எளிய மக்களின் உரிமைக்காகவும் பாடுபட்டதில் கவிமணியின் பங்கு மிகவும் முக்கியத்துவமும் முன்னோடியாகவும் விளங்குகின்றது என்றார்.
இதற்கான ஏற்பாடுகளை தேரூர் கவிமணி நற்பணி மன்றத்தின் சார்பாக தியாகி முத்து கருப்பன் அவர்கள் செய்திருந்தார். விழாவில் மரக்கன்றுகளும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான உபகரணங்களும் விநியோகிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!