தமிழகம்

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் டான்போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அருட்தந்தை அருள்சேகர் முயற்சியில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் இசை உலா போட்டி

154views
இன்று (02.12.23) வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் டான்போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புது முயற்சியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை. அருள்சேகர் முயற்சியில் முதல் முறையாக கிறிஸ்துமஸ் இசை உலா போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இல்ல தந்தை சுந்தர் பிரான்சிஸ் துவக்க ஜெபம, வரவேற்புரை ஆற்றினார். அருட்தந்தை. பால்ராஜ், அருட்தந்தை லூக்காஸ் முன்னிலையிலும், சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான டி. நோபல் லிவிங்ஸ்டன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கேடயங்களையும், பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

போட்டியின் நடுவர்களாக Dr. எஸ்.பி.சுந்தர்,Dr. பலவேந்திரன், திருமதி.ரீட்டா சிறந்த பாடல்கள் பாடிய பள்ளிகளை தேர்வு செய்தனர். முதல் பரிசு டன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி காந்திநகர், இரண்டாம் பரிசு ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மூன்றாம் பரிசு விருதம்பட்டு ஐடாஸ் கடர் பள்ளி , மற்றும் திருப்பத்தூர் டன்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளிகள் தட்டிச் சென்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் நினைவு பரிசுகளையும் வழங்கினர். டான் போஸ்கோ இளைஞர் மன்றம் தலைவர் பெருமாள் மற்றும் குழுவினர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் அன்பளிப்பாக வழங்கினர். நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் திருமதி. பிரேமா ராஜேந்திரன், பலவேந்திரன், ராஜ்சேகர் மற்றும் பள்ளியின் ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
செய்தியாளர் : D நோபல் லிவிங்ஸ்டன், வேலூர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!